ஒடிசாவில் மூன்று ரயில்கள் மோதிக் கொண்ட விபத்து என்பது மிகக் கொடுந்துயரம்!
இது ரயில்வே துறையின் உச்சக்கட்ட அலட்சியம் தவிர வேறில்லை!
விபத்து நடந்த நேரம் இரவு 7 மணி என்பதால் மீட்பு பணியை உடனே துவக்கி இருப்பார்கள்; அதனால் உயிருக்கு போராடிய ஒரு சிலர் காப்பாற்றப்பட்டு இருப்பார்கள். ஆனாலும், இந்த நிமிடம் வரை மரணமடைந்தோர் எண்ணிக்கை 200-ஐ தாண்டுகிறது. ஆயிரம் பேருக்கு மேல் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்.
ஆழ்ந்த இரங்கல்.
வழக்கமாக அரசாங்கம் என்ன பதில் சொல்லும் என்பது நமக்குத் தெரியும்.
விசாரணை, பொறுப்பான ஒரு சில அதிகாரிகள் சஸ்பெண்ட், நிவாரணத் தொகை அறிவிப்பு என வழக்கமான நிகழ்வுகளைக் கடத்தி விட்டு இரண்டொரு நாளில் அடுத்த வேலையைப் பார்க்கும்.
இதையெல்லாம் தாண்டி தார்மீகப் பொறுப்பு என்று ஒன்று உள்ளது; அதை ஏற்கும் தர்மம் எல்லாம் இன்றைய அரசியல் வாதிகளின் சித்தாந்தத்தில் உண்டா என்பது தான் கேள்விக் குறி தான்.
அரியலூர் ரயில் விபத்தின் போது தார்மீக பொறுப்பேற்று அப்போதைய ரயில்வே அமைச்சர் ராஜினாமா செய்ததை நினைவு கூற வேண்டும்.
அத்துடன், இனி இம்மாதிரி ஆகப்பெரும் அலட்சியங்கள் இல்லாத நிர்வாக கட்டமைப்பை உருவாக்க அரசாங்கம் முனைந்திட வேண்டும்.
ஏழைகள் என்றும் நீண்ட தூரப் பயணங்களுக்கு நம்பி இருப்பது ரயில்வேத் துறையை மட்டும் தான்.
ரயில்வேத் துறையை தனியாருக்கு தாரை வார்க்கத் துடிக்காமல், தொழில்நுட்ப ரீதியில் இன்னும் வளர்த்து மக்களுக்கான சேவைகளை துளியும் குறையின்றி வழங்கிட அரசாங்கம் முனைந்திட வேண்டும்.
#trainaccidents
#railway


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக